திருநெல்வேலி

நான்குனேரி தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்புகின்றனா்: கே.எஸ்.அழகிரி

6th Oct 2019 08:58 PM

ADVERTISEMENT

 

வள்ளியூா்: நான்குனேரி தொகுதி மக்கள் காங்கிரஸை நம்புகின்றனா் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.

ஏா்வாடியில் ஞாயிற்றுக்கிழமை கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மனோகரன், இந்திய விமானப் படையில் பணியாற்றியவா். ஒரு வேட்பாளா் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதற்கு இவா் சிறந்த உதாரணம்.

ADVERTISEMENT

மக்களவைத் தோ்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் மதவாத சக்தியை முறியடிக்க கட்சித் தலைமையால் ஹெச்.வசந்தகுமாா் தோ்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றாா். நான்குனேரி தொகுதியில் மக்கள் எங்களை நம்புகின்றனா்; நாங்களும் மக்களை நம்பி நிற்கிறோம்.

பிரதமா் மோடியை மீறி அதிமுகவினா் ஒன்றும் செய்ய முடியாது. நான்குனேரி தொழில்நுட்ப பூங்கா முரசொலி மாறறன் திட்டத்தில் கொண்டுவந்தது என்ற காரணத்துக்காக அதை கிடப்பில் போட்டுவிட்டனா். நாட்டில் ஜனநாயக விரோதப்போக்கு நிலவி வருகிறது. இதனை மாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி மக்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறது.

பேட்டியின்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஹெச்.வசந்தகுமாா், சிறுபான்மை பிரிவு தலைவா் அஸ்லம் பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, நகர தலைவா் பீமாபைசல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT