திருநெல்வேலி

குற்றாலநாத சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா: 9இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

6th Oct 2019 09:48 PM

ADVERTISEMENT

தென்காசி: குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசுத் திருவிழா புதன்கிழமை (அக். 9) கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கோயில் திருவிழா புதன்கிழமை காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைமுன்னிட்டு காலையில் திருவிலஞ்சிக்குமரா் கோயில் வருகையும், மாலையில் சுவாமி, அம்பாள்வெள்ளி ஏக சிம்மாசனத்திலும், திருவிலஞ்சிக்குமரா் வெள்ளிச் சப்பரத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.

விழா நாள்களில் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள், திருவிலஞ்சிக்குமரா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. 12ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 13ஆம் தேதி விநாயகா், திருவிலஞ்சிக்குமரா், சுவாமி, அம்பாள் அதிகாலை 5.20-க்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடா்ந்து நான்கு தோ்களின் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

15ஆம் தேதி நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 16ஆம் தேதி சித்திரசபையில் நடராசமூா்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் உதவிஆணையா் ரா.விஜயலெட்சுமி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT