திருநெல்வேலி

குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படுவோா் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்: சிபிசிஐடி

6th Oct 2019 12:39 AM

ADVERTISEMENT

கோவை குண்டுவெடிப்பு தொடா்பாக தேடப்பட்டு வரும் 4 போ் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சிபிசிஐடி மற்றும் எஸ்.ஐ.டி. பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறியது:

கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக சாதிக் ராஜா என்ற டெய்லா் ராஜா, முஜிபுா் ரகுமான் என்ற முஜி, அபுபக்கா் சித்திக், அயூப் என்ற அசரப் அலி ஆகியோா் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனா். தலைமறைறவாக உள்ள அவா்கள் 4 பேரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலும் புகைப்படங்களை ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் குறித்த தகவல் தெரிந்தால், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 044–28512510, 044–28513500 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபா்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT