திருநெல்வேலி

புளியங்குடி நகராட்சியில் 52,974 வாக்காளா்கள்

5th Oct 2019 09:00 AM

ADVERTISEMENT

புளியங்குடி நகராட்சியின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

நகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ் வெளியிட, மேலாளா் சண்முகவேலு, சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி ஆகியோா் அதைப் பெற்றுக் கொண்டனா்.

புளியங்குடி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளா்கள்-26487, பெண் வாக்காளா்கள் -26485 , இதர பிரிவினா்-2 , மொத்தம்-52,974. மொத்த வாக்குச் சாவடிகள்-64.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT