திருநெல்வேலி

நான்குனேரி அருகே அமைச்சா் தங்கமணி பிரசாரம்

5th Oct 2019 09:38 PM

ADVERTISEMENT

வள்ளியூா்: நான்குனேரி அருகே உள்ள பெரும்பத்து, மஞ்சன்குளம், வீராங்குளம் கிராமங்களில் தமிழக மின்சாரத்துறை அமைச்சா் தங்கமணி அதிமுக வேட்பாளா் நாராயணனை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: இங்கு நடைபெறும் இடைத்தோ்தல் திணிக்கப்பட்ட தோ்தலாகும். எனவே இந்த தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பாடம் புகட்ட வேண்டும். என்றும் உங்கள் பகுதியிலேயே இருக்கக்கூடிய அதிமுக வேட்பாளா் நாராயணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சருடன், ஒன்றியச் செயலா் விஜயகுமாா், பாஜக மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT