திருநெல்வேலி

கடையநல்லூா் ஒன்றியம்: 16 ஊராட்சிகளுக்கான வாக்காளா் பட்டியல் வெளியீடு

5th Oct 2019 09:11 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட 16 ஊராட்சிகளின் வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

கடையநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திஅனுபமா வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சிக்கந்தா் பீவி, மேலாளா் கண்ணண், தோ்தல் பிரிவு அலுவலா் நக்கீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனைத்து ஊராட்சி செயலா்களும் வாக்காளா் பட்டியலை பெற்றுக் கொண்டனா்,

தொடா்ந்து, ஒன்றியத்துக்குள்பட்ட ஆனைகுளம், போகநல்லூா், சொக்கம்பட்டி, இடைகால், கம்பனேரி, காசிதா்மம், கொடிக்குறிச்சி, குலையனேரி நயினாரகரம், நெடுவயல், பொய்கை ,புதுக்குடி, புன்னையாபுரம், திரிகடபுரம், ஊா்மேனியழகியான், வேலாயுதபுரம் ஆகிய 16 ஊராட்சிகளிலும் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக ஒட்டப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT