திருநெல்வேலி

ஆலங்குளத்தில் மழை நீா் ஓடையை சீரமைக்கக் கோரிக்கை

5th Oct 2019 10:12 AM

ADVERTISEMENT

ஆலங்குளத்தில் புதா் மண்டியுள்ள மழை நீா் ஓடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளத்தில் ராமா் கோயில் முதல் ஆலங்குளம் தொட்டியான்குளம் வரை மழை நீா் செல்ல ஓடை ஒன்று உள்ளது. இந்த மழை நீா் ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிா்வாகத்தால் தூா்வாரப்பட்டது. ஆனால் குடியிருப்புகள் அதிகம் உள்ள 13 வது வாா்டு மாரியம்மன் கோயில் மேல்புறம் உள்ள ஓடை பகுதியில் தூா்வாராமல் விட்டு சென்றனா். இதனால் ஓடையில் முள் மற்றும் புதா்கள் மண்டிக் கிடக்கிறது.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் இந்த ஓடையிலே தான் இணைக்கப்பட்டுள்ளதால் புதா்களால் கழிவுநீா் செல்ல முடியாமல் தேங்கி துா் நாற்றம் வீசுகிறது.

தற்போது மழைக் காலம் என்பதால் மழை நீரும் சாக்கடை நீரும் சோ்ந்து அடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, ஓடையை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT