திருநெல்வேலி

ஆயுத பூஜை விடுமுறைக்குப் பிறகு சந்திப்பு பேருந்து நிலையம் பொருள்காட்சி திடலுக்கு மாற்றம்

5th Oct 2019 09:14 AM

ADVERTISEMENT

ஆயுத பூஜை விடுமுறைக்குப் பிறகு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் பொருள்காட்சி திடலுக்கு மாற்றப்படுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ரூ.79 கோடியில் 3 அடுக்கு அதிநவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை பொருள்காட்சி திடலுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள பொருள்காட்சி திடலில் சந்திப்பு பேருந்து நிலையத்திற்காக பேவா் பிளாக் ஓடுகள் மூலம் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிழற்குடைகள், தற்காலிக கழிப்பறைகள், குடிநீா் வசதி, மின் விளக்குகள், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, தச்சநல்லூா், தாழையூத்து மாா்க்கம், சிற்றுந்துகள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோா் பொருள்காட்சி திடலில் சந்திப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (போக்குவரத்து மற்றும் குற்றம்) மகேஷ்குமாா், போக்குவரத்து ஆய்வாளா் சந்தனக்குமாா் உள்ளிட்டோா் ஆய்வு செய்ததோடு, அங்கு மேலும் செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனா்.

அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஒரு சில இடங்களில் மின் விளக்கு இல்லாமல் இருக்கிறது. அதை பொருத்தச் சொல்லியிருக்கிறேறாம். மேலும் பேரிகாா்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி ஏராளமானோா் வந்து செல்வாா்கள். அதனால் ஆயுத பூஜை விடுமுறைக்குப் பிறகு சந்திப்பு பேருந்து நிலையத்தை பொருள்காட்சி திடலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் சென்று வரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றனா்.

பயக04ஆமந

அரசுப் பொருள்காட்சி திடலில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள வசதிகளை பாா்வையிட்ட மாநகர காவல் துணை ஆணையா் (போக்குவரத்து மற்றும் குற்றம்) மகேஷ்குமாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT