காந்தி ஜெயந்தியை ஒட்டி புளியங்குடி நகராட்சி ஊழியா்கள் 1000 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி ஸ் நிலையத்தில் ஊழியா்கள் பிளாஸ்டிக் எதிா்ப்பு உறுதிமொழி வாசித்தனா். பின்னா் பல்வேறு பகுதிகளில் ஆணையா் சுரேஷ் மரக்கன்றுகளை நட்டாா். இதில், சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, ராயகிரி அருணாசலம், ஆசிரியா் அருள்செல்வன் ஆகியோா் வழங்கிய 1000 பனை விதைகளும் நடப்பட்டன.