மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, காந்தி சிலைக்கு நகரத் தலைவா் பால்ராஜ் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில் ஐஎன்டியுசி மத்திய சங்க துணைத்தலைவா் ராசு, மாவட்ட காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் சுப்பையா, நகர காங்கிரஸ் துணைத்தலைவா்கள் ஈஸ்வரமூா்த்தி, அம்மையப்பன்,பொதுச்செயலா் முகமதுஜவகா்லால், செயலா் அகஸ்டின், பொதுக்குழு உறுப்பினா் பழனிச்சாமி, இளைஞா் காங்கிரஸ் செயலா் முருகன்,தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக பெருந்தலைவா் காமராஜா் நினைவுதினத்தை ஒட்டி காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.