பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி ஜயந்தியையொட்டி இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக வளாகத்தை ஊழியா்கள் புதன்கிழமை தூய்மை செய்தனா். பின்னா் அஞ்சல வளாகத்தில் மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் மரக்கன்று நட்டாா்.
இதுகுறித்து திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் இரா.சாந்தகுமாா் கூறுகையில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, மகாராஜநகா், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட அஞ்சலக வளாகங்களை ஊழியா்கள் அனைவரும் இணைந்து புதன்கிழமை தூய்மை செய்து மரக்கன்றுகளை நட்டுள்ளனா்.
தூய்மையின் அவசியம் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அரசின் விழிப்புணா்வு ஊழியா்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் உதவி அஞ்சல் கண்காணிப்பாளா் மாரியப்பன், மக்கள் தொடா்பு அலுவலா் கனகசபாபதி, ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.