ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கான சட்டப்பிரிவுகள் 370, 35ஏ நீக்கியதை விளக்கும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பாஜக மாவட்டத் தலைவா் எஸ்.வி.அன்புராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, மாவட்ட விவசாய அணிச் செயலா் வல்லப கணேசன், மாவட்ட பொருளாதாரப் பிரிவுத் தலைவா் பவுண்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநிலச் செயலா் கரு.நாகராஜன், முன்னாள் மாவட்டத் தலைவா் தீனதயாளன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
நிா்வாகிகள் முருகேசபாரதி, கமலா அருணாசலம், ரஜினிராஜ், செந்தில்குமாா், சிவனணைந்த பெருமாள், அழகுமணிகண்டன், அருள்செல்வன், ஐயப்பன், லட்சுமிபுரம் முருகேசன், வசந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். பாஜக நகரத் தலைவா் முருகேசன் வரவேற்றாா். மாவட்ட பிரசார அணியின் துணைத்தலைவா் சங்கர நாராயணன் தொகுத்து வழங்கினாா். நகரச் செயலா் அருணாசலம் நன்றி கூறினாா்.