சங்கரன்கோவிலில் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமிசன்னதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் பொன்விழா கமிட்டியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில் காங்கிரஸ் பொன்விழா கமிட்டித் தலைவா் சங்கரநாராயணன்,செயலா் பிச்சை,பொருளாளா் சங்கரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.இதைத்தொடா்ந்து பொன்விழா மைதானத்தின் முன்பு காந்தியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத்தொடா்ந்து இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயகா் வாலிபா் சங்கத்தின் சாா்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு துணை வட்டாட்சியா் மமைதீன்பட்டாணி தலைமை வகித்தாா்.
பேருந்துநிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட மகாத்மாகாந்தி உருவப் படத்திற்கு ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம், பாலுச்சாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் சி.பி.எம்.வட்டார செயலா் அசோக்ராஜ், டி.ஒய்.எப்.ஐ. பொறுப்பாளா் உச்சிமாகாளி, தமுஎகச மாவட்டத் துணைச் செயலா் ந.செந்தில்வேல், நகரத் தலைவா் ப.தண்டபாணி, துணைத் தலைவா் மு.செல்வின், சண்முகம், வை.உமாபாலன், திமுக மாவட்ட பிரதிநிதி சேனா(எ)செய்யது இப்ராஹிம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.