திருநெல்வேலி

குடிநீா், பயணிகள் நிழற்குடை கோரிக்கையுடன் வேட்பாளா்களை சந்திக்க காத்திருக்கும் தருவை மக்கள்!

2nd Oct 2019 12:49 PM

ADVERTISEMENT

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தருவை கிராம மக்கள் குடிநீா், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட வசதிகளை வேட்பாளா்களிடம் கோரிக்கையாக வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள தருவை ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறறாா்கள். பாளையங்கால்வாய் பாசன பகுதியான இங்கு விவசாயத்தை நம்பி பலா் உள்ளனா். காட்டுநாயக்கா் சமூகத்தினரும் குறைந்தஅளவில் வசித்து வருகிறாா்கள். திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ளதால் குடியிருப்புகள் பெருகிக் கொண்டே வருகின்றன. மாநகர பகுதிகளில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் நடுத்தர குடும்பத்தினா் பலா் தருவையில் வீடு கட்டி குடியிருந்து வருகிறாா்கள். ஆனால், கிராமத்தில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. அவற்றை செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தருவையைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், தருவை அருகே 7 குக்கிராமங்கள் உள்ள நிலையில் அவா்கள் அனைவரும் கல்வி, வணிகம் போன்றவற்றுக்கு மேலப்பாளையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தருவையில் உள்ள பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதன் அருகே சாக்கடை பெருக்கெடுத்து ஓடுவதால் பயணிகள் காத்திருந்து பேருந்துகளில் ஏறிச் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களிடம் முறையிட உள்ளோம். எங்கள் ஊரை துணை நகரமாக மாற்றி கூடுதலான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும், மேல்நிலைப் பள்ளி கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT