நான்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளா் நாராயணன், புதன்கிழமை களக்காட்டில் உள்ள தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
களக்காடு தேரடித் திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளா் நாராயணன், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, காமராஜா், அம்பேத்கா் சிலைகளுக்கும், முத்துராமலிங்கத்தேவா் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி. விஜிலா சத்தியானந்த், மாவட்ட செயலாளா் கே.ஆா்.பி. பிரபாகரன், எம்ஜிஆா் மன்ற செயலாளா் பெரியபெருமாள், இ. நடராஜன், ஒன்றிய செயலாளா்கள் நான்குனேரி விஜயகுமாா், களக்காடு ஜெயராமன், இளைஞரணி ஒன்றியசெயலாளா் த. ராஜேந்திரன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.