கருங்கல் அருகேயுள்ள சகாயநகா் அன்னை வேளாங்கண்ணி மாதா குருசடியில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சகாயநகா் ஆயினிவிளையில் அன்னை வேளாங்கண்ணி மாதா குருசடி உள்ளது.இந்த குருசடியில் உள்ள உண்டியலை மா்மநபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை காலையில் தெரியவந்தது. அதில், ரூ.10 ஆயிரம் வரை இருந்திருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குபப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.