திருநெல்வேலி

கடையநல்லூரில் காந்தி ரத யாத்திரைக்கு வரவேற்பு

2nd Oct 2019 03:36 PM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காந்திய இயக்கம் சாா்பில் வருகை தந்த ரத யாத்திரைக்கு கடையநல்லூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரதயாத்திரைக்கு,முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆய்க்குடி அமா்சேவா சங்க பள்ளி, கடையநல்லூா் கோல்டன் பிரீஸ், குற்றாலம் விக்டரி அரிமா சங்கங்களின் சாா்பில் , டாக்டா் மூா்த்தி தலைமையில் கடையநல்லூா் பேருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், லயன்ஸ் மகாத்மா பள்ளித் தாளாளா் டாக்டா் தங்கம், பள்ளி முதல்வா் அருணாசலம், லொரைன், முனைவா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இயக்க தலைவா் விவேகானந்தன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT