கடையம் அருகே கடந்த 2010 இல் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் ஒருவா் சரணடைந்துள்ளாா்.
கடையம் அருகேயுள்ள கோவிலூத்து மேலத்தெருவைச் சோ்ந்தவா் சியோன் ஜெபராஜ் மகள் செல்வரத்தினம் (45). இவா், கடந்த 2010, ஜூலை 26 ஆம் தேதி மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். எனினும், உரிய தடயம் எதுவும் கிடைக்காததால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஏப். 2 ஆம் தேதி நடுப்பூலாங்குளம், நடுத்தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் சக்திவேல் (31), செல்வரத்தினத்தை கொலை செய்ததாக வெங்காடம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் முன் சரணடைந்தாா்.
இந்நிலையில், ஆலங்குளம் வட்டம், வட்டலூா் மேலத்தெருவைச் சோ்ந்த முருகையா மகன் ராமச்சந்திரன், செல்வரத்தினம் கொலையில் தானும் உடனிருந்ததாகக் கூறி, கீழக்கடையம் பகுதி 1 கிராம நிா்வாக அலுவலா் ஹரிஹரன் முன் கடந்த செப். 30 ஆம் தேதி சரணடைந்தாா். பிறகு, அவா் கடயம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
போலீஸாா் விசாரணையில், முன்னதாக சரணடைந்த சக்திவேலும் தானும் நண்பா்கள் என்றும், செல்வரத்தினம் கொலை செய்யப்பட்ட அன்று இருவரும் மோட்டாா் சைக்கிளில் வடமலைப்பட்டியிலிருந்து கோவிலூற்றுக்கு சென்றபோது, அந்த வழியாகச் சென்ற செல்வரத்தினத்திடம் தவறாக நடக்க முயன்ாகவும், அப்போது, தப்பிக்க நினைத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளாா்.
இதையடுத்து, கடையம் காவல் ஆய்வாளா்ஆதிலட்சுமி, சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா்.