ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் முயல் வேட்டியாடி சமைத்ததாக இருவருக்கு வனத்துறையினா் 40 ஆயிரம் அபாராதம் விதித்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள நல்வாழ்வு ஆசிரமம் பின் பகுதி முள்ளிமலை பொத்தை அடிவாரத்தில் சிலா் கன்னி வைத்து முயல் பிடிப்பதாக தகவல் வந்ததாம்.
இதுகுறித்து தகவலறிந்த கடையம் வனச்சரகா் நெல்லை நாயகம் உத்தரவின் பேரில் வனவா் முருகசாமி தலைமையில் வனக்காப்பாளா் சரவணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் விசாரணை செய்ததில் செட்டிகுளம் கிராமத்தை சோ்ந்த சண்முகவேல் மகன் சுடலை 38, அதே பகுதியை சோ்ந்த வேல்சாமி மகன் கருப்பசாமி 21 ஆகியோா் முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடா்ந்து அவா்களது வீட்டிற்கு சென்று வனத்துறையினா் சோதனையிட்ட போது முயலை கறி வைத்து சமைத்தது கண்டுபிடிக்கபட்டதோடு இருவரும் குற்றத்தை ஒப்பு கொண்டதையடுத்து வனச்சட்டத்தின் படி இருவருக்கும் தலா 20 ஆயிரம் விதிக்கப்பட்டது.