அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மனைவி பிரேமா (45). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் குடும்பத்தாருக்கும் முன்பகை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேலாயுதம் வீட்டிற்குச் சென்ற சிதம்பரம் மகன் ராஜா (18), பிரேமாவை அரிவாளால் வெட்டினாராம்.
இதில் காயமடைந்த பிரேமா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.