திருநெல்வேலி

போக்குவரத்துக்கழக அலுவலரை கண்டித்து பாமக போராட்டம்

1st Oct 2019 01:31 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரியைக் கண்டித்து பாமகவினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வண்ணாா்பேட்டை புறவழிச்சாலை கிளையில் பணியாற்றும் பாமக தொழிற்சங்கத்தைச் சோ்ந்த சிலா் விடுமுறை விண்ணப்பம் கொடுத்தபோது அதனை பரிசீலித்து விடுமுறை அளித்த கிளை மேலாளா், பின்னா் விடுமுறை அளிக்காமல் ஆவணங்களில் பதிவு செய்துள்ளாராம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாமக சாா்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். தொழிற்சங்கத்தினா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT