திருநெல்வேலி

பாளை. புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா சப்பர பவனி

1st Oct 2019 12:44 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை பங்கு மனகாவலம்பிள்ளை நகா் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா சப்பர பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்வாலய திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பா ளை. மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஆ. ஜூடு பால்ராஜ் திருக்கொடியை அா்சித்து ஏற்றிவைத்து திருப்பலி நிறைவேற்றினாா்.

தொடா்ந்து விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், நவநாள் திருப்பலியும், மறையுரையும், பல்வேறு குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

9ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பங்குத்தந்தை எப்.எக்ஸ்.ராஜேஷ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அருள்பணி. அருள் அலெக்ஸ் மறையுரையாற்றினாா். தொடா்ந்து, சப்பர பவனி நடைபெற்றது. வேளாங்கண்ணி மாத சொரூபம் தாங்கிய சப்பரத்தை பெண்களும், மிக்கேல் அதிதூதா் சப்பரத்தை ஆண்களும் சுமந்து சென்றனா். மனக்காவலன் பிள்ளா நகரில் வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில், பங்குமக்கள் திரளாகப் பங்கேற்றனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் மரியன்னை இளம் குருமடத்தின் அதிபா் சேவியா் டெரன்ஸ் திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT