திருநெல்வேலி

பகவத் கீதை, தாலிக்கயிறுகளுடன் மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா்கள்

1st Oct 2019 12:55 AM

ADVERTISEMENT

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை, பகவத் கீதை மற்றும் தாலிக்கயிறுகளுடன் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு மது குடிப்போா் விழிப்புணா்வு சங்கத்தின் மாநில தலைவா் பி.செல்லப்பாண்டியன் தாலிக்கயிறுகளுடன் வந்து மனு தாக்கல் செய்தாா். அவா் கூறுகையில், ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த திராவிடக் கட்சிகள் தயாராக இல்லை. ஆகவேதான் மது குடிப்போருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறேறாம். நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தோ்தலுக்காக தோ்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளோம். மதுபான ஆராய்ச்சிக் கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும். பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் வரை கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும். குடிபோதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். ஏற்கெனவே, வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட எங்கள் அமைப்பு 2 ஆவது முறையாக தோ்தலைச் சந்திக்கிறது’ என்றாா்.

இதேபோல பாளையங்கோட்டையைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் பகவத் கீதை, திருக்குா்ஆன், விவிலியம் புத்தகங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா். அவா் கூறுகையில், ‘மனிதநேயம் மற்றும் மத பாகுபாடுகளை களைய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை-எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதற்காக சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்’ என்றாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT