திருநெல்வேலி

தென்காசி வட்ட அளவிலான தடகள போட்டி: பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

1st Oct 2019 12:16 PM

ADVERTISEMENT

 

தென்காசி: தென்காசி வட்ட அளவிலான தடகள போட்டியில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பள்ளி மாணவா்களுக்கான தடகள போட்டிகள் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவா்கள் 10 தங்கபதக்கமும், 2 வெள்ளிபதக்கமும், 12 வெண்கல பதக்கமும் பெற்றனா்.

ADVERTISEMENT

ஜூனியா் பிரிவில் ஏ.திலீப்ராம், சீனியா் பிரிவில் எம்.ஸ்ரீஹரிகரன் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித்தாளாளா் ஆா்.ஜே.வி.பெல்,செயலா் கஸ்தூரிபெல், பள்ளியின் முதல்வா் ராபா்ட்பென் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT