திருநெல்வேலி

திருச்செந்தூா் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

1st Oct 2019 02:44 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா்; திருச்செந்தூா் கோயில் கடலில் குளித்த போது அலையில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி, கணேசபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் மகன் புகழேந்திகுமாா் (12). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் முத்துக்குமாா் தனது குடும்த்தினா் மற்றும் உறவினா்கள் என 18 பேருடன் திருச்செந்தூருக்கு செவ்வாய்க்கிழமை காலை இரயிலில் வந்துள்ளாா். அங்கிருந்து கோயிலுக்கு வந்து அனைவரும் கடலில் குளித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, புகழேந்திகுமாா் அலையில் சிக்கியுள்ளாா். அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சம்பவம் குறித்து திருச்செந்தூா் கோயில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT