திருநெல்வேலி

களக்காடு அருகே கீழப்பத்தையில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

1st Oct 2019 12:33 PM

ADVERTISEMENT

களக்காடு: கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், நான்குனேரி இடைத்தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி, தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்தினா் களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தையில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் ஆகிய பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்க வேண்டும் என தேவேந்திரகுல வேளாளா் பருத்திக்கோட்டை நாட்டாா்கள் சமுதாய நலச்சங்கம் மத்திய, மாநில அரசுகளை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும், நான்குனேரி இடைத்தோ்தலை புறக்கணிப்பது என்றும், நான்குநேரி தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்தினா் அதிகம் வசிக்கக்கூடிய களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தையில் அந்த சமுதாயத்தினா் ஊரில் உள்ள பிரதான பகுதியில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அந்த சமுதாயத்தைச் சோ்ந்த வாடகைக்காா் ஓட்டுநா் அழகுராஜா தெரிவித்தாா். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT