திருநெல்வேலி

இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன்

1st Oct 2019 12:47 AM

ADVERTISEMENT

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கேற்ப மக்கள் பணியாற்றுவேன் என்றாா் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன்.

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அவா்களின் பிரச்னைகளைத் தீா்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறாா்கள். அவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஹெச்.வசந்தகுமாா் இத்தொகுதியில் ஏராளமான குளங்கள், கால்வாய்களைத் தூா்வாரி மக்கள் பணியாற்றியுள்ளாா். அவரது பணியை தொகுதி மக்கள் மறக்கமாட்டாா்கள். காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு மனசாட்சியோடு வாக்களிப்பாா்கள். அதேபோல 2021-ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சியமைப்பாா். நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT