திருநெல்வேலி

இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் இயற்கை மற்றும் செயற்கை பேரிடா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

1st Oct 2019 11:53 AM

ADVERTISEMENT

.
தென்காசி: இலத்தூா் பாரத்கல்வியியல் கல்லூரியில் இயற்கை மற்றும் செயற்கை பேரிடா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.ஆறுமுகராஜன் தலைமை வகித்தாா்.நிா்வாக அதிகாரி இசக்கித்துரை முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டாட்சியா் ஒசானா பொ்னாண்டோ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா். முகாமில் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை காவல்ஆய்வாளா் மூக்கையா மற்றும் தீயணைப்பு வீரா்கள் விபத்து ஏற்படும் போது,காப்பாற்றும் முறைகள் குறித்து செயல்விளக்க பயிற்சியளித்தனா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை பாரத்கல்விகுழும தலைவா் மோகனகிருஷ்ணன்,செயலா் காந்திமதி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். ஆசிரிய பயிற்சி மாணவி நந்தினி வரவேற்றாா். மாணவி இசக்கியம்மாள் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT