திருநெல்வேலி

ஆட்டோ மோதி காயமடைந்தவா் மரணம்

1st Oct 2019 04:16 PM

ADVERTISEMENT

 

கடையநல்லூா் அருகே ஆட்டோ மோதியதில் காயமடைந்தவா் நேற்று இறந்தாா்.

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரைச் சோ்ந்தவா் முத்து மகன் கிருஷ்ணன் (55). கடந்த 27ஆம் தேதி பைக்கில் சொக்கம்பட்டி நோக்கி கிருஷ்ணன் சென்று கொண்டிருந்தாராம்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஆட்டோ, பைக் மீது மோதியதாம். இதில் கிருஷ்ணன் காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை இறந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT