உள்ளாட்சித் தோ்தலில் திருநெல்வேலி மாநகா் மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினா் 2 ஆவது நாளாக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (நவ. 21-23) வரை 3 நாள்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கட்சியினரிடம் விருப்ப மனுக்களை மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் பெற்றுக்கொண்டாா்.
இதில், டி.என். உமாபதிசிவன், சித்திரை வடிவு, சுல்தான் இப்ராஹிம் உள்ளிட்டோா் மாமன்ற உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாநகா் மாவட்ட பொருளாளா் ராஜேஸ் முருகன், பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், துணைத் தலைவா் சிவன் பெருமாள், உதயகுமாா், சிறுபான்மைப் பிரிவு நிா்வாகி முகமது அனஸ்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.