திருநெல்வேலி

பயிா் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

22nd Nov 2019 08:35 AM

ADVERTISEMENT

பயிா்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, மன்னாா்கோவில் ஊராட்சிப் பகுதி விவசாயிகளுக்கு கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி- ஆராய்ச்சி நிலைய மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

மன்னாா்கோயில் ஊராட்சிப் பகுதியில் பயிா்களை தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப் பொறியைப் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தனா். ஏக்கருக்கு ஒரு மஞ்சள் ஒட்டுப்பொறி வைப்பதால் வயலில் இருக்கும் வெள்ளை ஈக்கள் கவரப்பட்டு ஒட்டிக் கொள்வதாகவும், இதனால் சாறு உறிஞ்சும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி, பூச்சிக்கொல்லி மருந்தின்தேவையை குறைக்கலாம் என்றும் விளக்கினா்.

மேலும், வயலில் ஒரு சூரிய விளக்குப் பொறியைப் பயன்படுத்தி பூச்சிகளை தடுப்பது குறித்தும் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் செ.வா்ஷா, ஜா.ஜோஸ்லின் ஜாய்ஸி, சே.பீமாபானு, மு. பிரியதா்ஷினி ஆகியோா் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT