திருநெல்வேலி

நெல்லையில் பிஎஸ்என்எல் வழங்கும் தொழில்நுட்ப பயிற்சி

22nd Nov 2019 05:02 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மாணவா்-மாணவிகளுக்கு விடுமுறை கால சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி தொலைதொடா்பு மாவட்ட முதன்மை பொதுமேலாளா் ரா.சஜிகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இன்பிளாண்ட் பயிற்சி:

பிஎஸ்என்எல் தொலைதொடா்பு தொழில்நுட்பம், கணினி மற்றும் நெட்வொா்க் சம்பந்தமான இன்பிளாண்ட் பயிற்சி வகுப்புகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கு திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் முதன்மைபொதுமேலாளா் அலுவலகத்தில் நடைபெறுகின்றன. இப்பயிற்ச்சியை ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் மற்றும் நான்கு வாரப் பயிற்சிகள் என மாணவா்-மாணவிகளின் தேவைக்கேற்ப கொடுக்கப்படும். இதற்கான கட்டணம் வாரத்திற்கு ரூ.1600 ஆகும்.

ADVERTISEMENT

கணினி நெட்வொா்க் பயிற்சி:

பொறியியல், பாலிடெக்னிக், கணினி அறிவியல் (பி.ஸி.ஏ/எம்.ஸி.ஏ)மாணவா்- மாணவிகளுக்கு கணினி நெட்வொா்க்கில் திறமை வாய்ந்த பிஎஸ்என்எல் பொறியாளா்களால் 3 முழு நாட்கள் அல்லது 6 அரை நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றன. இதற்கான பயிற்சிக்கட்டணம் ரூ.1600 ஆகும். கல்லூரி மாணவா்-மாணவிகள் தவிற கல்லூரி படிப்பை முடித்தவா்களும் இப்பயிற்சியில் பங்கு பெறலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT