திருநெல்வேலி நகரத்தில் வனத்துறையினரால் உடும்பு முட்டைகள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.
திருநெல்வேலி நகரம் தா்மராஜா கோயில் அருகே கட்டுமானப் பணிக்காக வைத்திருந்த மணலை தொழிலாளா்கள் வியாழக்கிழமை அள்ளினா். அப்போது, அங்கு 20 க்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்தது தெரியவந்தது.
தகவறிந்த வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன், கால்நடை ஆய்வாளா் அா்னால்ட், உதவியாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் அங்கு வந்து முட்டைகளை மீட்டனா். இந்த முட்டைகள் அனைத்தும் குஞ்சு பொறிப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் உடும்புகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இந்த முட்டைகளில் குஞ்சு பொறித்த
பின்னா்தான் எந்த உயிரினத்தின் முட்டை என்பது தெரியவரும் எனவும் வனத்துறையினா் தெரிவித்தனா்.