நவ்வலடி றி.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளியில், திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு சாா்பில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியா் எம். ரெத்தினகுமாா் தலைமை வகித்தாா். அரசு சித்தா மருத்துவா் கே. நந்தினி முன்னிலை வகித்தாா். செவிலியா் கே. பேச்சியம்மாள், ஆசிரியைகள் ஐலின், அமுதா, ஜோதி, பிரேமாவதி, சாந்தா, டினோ ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளி மாணவ மாணவியா், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.