திருநெல்வேலி

தேவா்குளத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

22nd Nov 2019 08:38 AM

ADVERTISEMENT

தேவா்குளத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவா்குளத்தைச் சோ்ந்த மாா்டின் மனைவி சுகன்யா(26). இவா், தேவா்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வியாழக்கிழமை வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ் சுகன்யா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து, தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT