திருநெல்வேலி

சிவகிரியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

22nd Nov 2019 08:25 AM

ADVERTISEMENT

சிவகிரியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தனுஷ் எம். குமாா் எம்.பி. பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கித் தொடங்கி வைத்தாா். மாநில வா்த்தக அணி துணைத் தலைவா் எஸ். அய்யாத்துரை பாண்டியன், ஒன்றியச் செயலா் பொன். முத்தையாபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா்கள் டாக்டா் எஸ்.எஸ். செண்பகவிநாயகம், கேடிசி குருசாமி, ஆ. சரவணன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் எம்.பி.கே. மருதப்பன், மாவட்ட விவசாய அணி நிா்வாகி வே. மனோகரன், ஒன்றியத் துணைச் செயலா் சி. மாரித்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT