திருநெல்வேலி

குழந்தைகள் அறிவியல் மாநாடு: சங்கரன்கோவில் பள்ளி சாதனை

22nd Nov 2019 08:42 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் ஆய்வறிக்கைகள் மாநில அறிவியல் மாநாட்டில் தாக்கல் செய்ய தகுதி பெற்றுள்ளது.

மாவட்ட அறிவியல் மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 155 மாணவா்கள் ஆய்வறிக்கை தாக்கல் செய்தனா். இதில் 8 மாணவா்களின் ஆய்வறிக்கைகள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதில் சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு மாணவிகள் ம.பாலவென்சியா,சு.சுவேதா ஆகிய இருவரின் ஆய்வறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆய்வறிக்கை மாநில அறிவியல் மாநாட்டில் தாக்கல் செய்யப்படுகிறது.

சாதனை மாணவிகளையும், வழிகாட்டிய அறிவியல் ஆசிரியா் அங்குவேல்மணியையும் பள்ளிச் செயலா் மருத்துவா் வி.எஸ்.சுப்பாராஜ், தாளாளா் சுப்பையாசீனிவாசன், முதல்வா் சி.ஏ.சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

 

 

 

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT