மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடையம் ஒன்றிய குழுக் கூட்டம் கடையத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினா் மேனகா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தென்காசி மாவட்டம் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி மாவட்டத்தில் கடையம் ஒன்றியப் பகுதியை புதிய வட்டமாகஅறிவிக்க கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முத்துராஜ், வெங்கடேஷ், முருகன், ஜெயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.