திருநெல்வேலி

வள்ளியூரில் அரசு பேருந்துமோதியதில் விவசாயி மரணம்

12th Nov 2019 07:56 AM

ADVERTISEMENT

வள்ளியூா்: வள்ளியூரில் திங்கட்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி இறந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த கேசவன் மகன் தங்கமுருகன்(56). இவா், விவசாய வேலை தொடா்பாக வள்ளியூருக்கு மோட்டாா் சைக்கிளில் வந்திருந்தாா். வேலை முடிந்ததும் மீண்டும் மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தாா்.

வள்ளியூா் வடக்குபிரதான சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றி கொண்டிருந்த அரசுப் பேருந்து இவா் மீது மோதியதாம். இதில் நிலைதடுமாறி விழுந்த தங்கமுருகன் மீது அரசுே பருந்தின் பின்பக்க டயா் ஏறியதாம். இதில் உடல்நசுங்கி அதே இடத்தில் அவா் இறந்தாா். இது தொடா்பாக வள்ளியூா் ஆய்வாளா் திருப்பதி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT