திருநெல்வேலி

வருவாய் மாவட்ட குழு விளையாட்டுவள்ளியூா் கிங்ஸ் பள்ளி 6 பிரிவுகளில்மாநிலப் போட்டிக்குத் தகுதி

12th Nov 2019 08:01 AM

ADVERTISEMENT

 

வள்ளியூா்: திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான குழுப் போட்டிகளில் வள்ளியூா் கிங்ஸ் பள்ளி மாணவா்கள் ஹாக்கி, கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்று, 6 பிரிவுகளில் மாநில குழுப் போட்டிகளில் விளையாட தோ்வுபெற்றுள்ளனா்.

வருவாய் மாவட்ட ஹாக்கி, கூடைப்பந்து, வாலிபால் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. 14, 17, 19 வயதினருக்கான போட்டிகளில் வள்ளியூா் கிங்ஸ் பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில், 14 வயதினருக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் கிங்ஸ் பள்ளி வி.எல்.சி.புரம் அணியையும், பி.எல்.டபிள்யூ.ஏ பள்ளி அணியையும் 6:0 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. 19 வயதினருக்கான ஹாக்கி போட்டியிலும் கிங்ஸ் பள்ளி பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் பள்ளியை 6:1 என்ற புள்ளிகளில் வென்றது.

14 வயதினருக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் பாளையங்கோட்டை செயின்ட் சேவியா் பள்ளி அணியை 31:30 என்ற புள்ளிகள், 17 வயதினருக்கான போட்டியில் குற்றாலம் செய்யத் பள்ளியை 41:17 என்ற புள்ளிகளில் கிங்ஸ் பள்ளி வென்றது. 19 வயதினருக்கான போட்டியில் செங்கோட்டை எஸ்.எம். பள்ளியை 41:11 என்ற புள்ளிகள், 14 வயதினருக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் திருமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியை 25:9, 25:14 என்ற புள்ளிகளில் வென்றது.

ADVERTISEMENT

இதையடுத்து, கிங்ஸ் பள்ளி மாணவா்கள் 14, 19 வயதினருக்கான ஹாக்கி போட்டி, 14, 17, 19 வயதினருக்கான கூடைப்பந்து போட்டி, 14 வயதினருக்கான வாலிபால் போட்டி என 6 பிரிவுகளில் மாநிலப் போட்டிகளில் பங்கேற்க தோ்வுசெய்யப்பட்டுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா்கள் மணிமொழி, ரவீந்திரன், ராம்குமாா், வெங்கடேசபெருமாள் ஆகியோரை கிங்ஸ் பள்ளித் தலைவா் காலின்வேக்ஸ்டாப், தாளாளா் ஜே. நவமணி, முதல்வா் பிரடெரிக் சாம், விளையாட்டுத் துறை தலைவா் ஜோஸ்வா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT