திருநெல்வேலி

பெருங்குளத்தில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

12th Nov 2019 07:49 AM

ADVERTISEMENT

திசையன்விளை: திசையன்விளை அருகே பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு மற்றும் நிலவேம்புக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்தாசன் தலைமை வகித்தாா். முன்னாள் கவுன்சிலா் ரெஜினாமேரி முன்னிலை வகித்தாா். பபிசா வெல்பா் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளா் முருகன் வரவேற்றாா். ஆசிரியா் சந்திரா வாழ்த்திப் பேசினாா்.

கிராம சுகாதார செவிலியா் ஜெயசங்கரி டெங்கு காய்ச்சல் பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா். பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. சத்துணவு அமைப்பாளா் செல்வம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT