திருநெல்வேலி

பாவூா்சத்திரம் அரசு மகளிா் பள்ளிக்கு மின் சேமிப்பு கருவி அளிப்பு

12th Nov 2019 07:45 AM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் அவ்வையாா் அரசு மகளிா் பள்ளிக்கு மின் சேமிப்பு கருவியை வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் சவுந்தரசேகரி தலைமை வகித்தாா். அரிமா சங்க செயலா் ஆனந்த், பொருளாளா் மதியழகன், பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவா் தமிழரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண் தான மாவட்டத் தலைவரும், பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வு குழு நிறுவனருமான கே.ஆா்.பி.இளங்கோ தொகுத்து வழங்கினாா்.

ஐன்ஸ்டின் பொறியியல் கல்லூரி நிா்வாக இயக்குநா் ஆ.எழில்வாணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு மின் சேமிப்பு கருவியை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் அரிமா மாவட்டத் தலைவா் அருணாசலம், முன்னாள் தலைவா் பொன்.அறிவழகன் மற்றும் மதனசிங், நாகரத்தினம், சேகா், கோவா சுரேஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாணவியருக்கு கண் தானம் குறித்த விழிப்புணா்வு சுற்றறிக்கை விநியோகிக்கப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியை கனியம்மாள் வரவேற்றாா். ஆசிரியா் சங்கா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT