திருநெல்வேலி

பாவூா்சத்திரத்திலிருந்துசென்னை, கோவைக்கு அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை

12th Nov 2019 07:50 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்திலிருந்து சென்னை, கோவைக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வளா்ந்துவரும் தொழில் நகரங்களில் ஒன்றானபாவூா்சத்திரம், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளது. இங்கிருந்து திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், சிவகாசி, பாபநாசம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை, கோவை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு 5-க்கும் மேற்பட்ட தனியாா் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அவற்றில் குறைந்தது 30 முதல் 50 போ் வரை பயணம் செய்கின்றனா்.

பாவூா்சத்திரத்திலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடி அரசுப் பேருந்து இல்லாததால், பண்டிகைக் காலங்களில் தனியாா் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனா். எனவே, சென்னை, கோவைக்கு பாவூா்சத்திரத்திலிருந்து புறப்படும் வகையில் அரசுப் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT