திருநெல்வேலி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின ஓவியப் போட்டி

12th Nov 2019 07:57 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியை காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தொடங்கிவைத்தாா். ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா் -மாணவிகளுக்கான இந்த ஓவியப் போட்டியில், ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு வரை வண்ணம் தீட்டுதல் போட்டியும் , 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘மலரும் இலையும்’ என்கிற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற்றது.

இப்போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களின் விவரம் குழந்தைகள் தினமான நவ. 14-ஆம் தேதி தெரிவிக்கப்படும். 17-ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT