திருநெல்வேலி

சிவகிரி, ராயகிரி பகுதியில் நாளை மின்தடை

12th Nov 2019 07:52 AM

ADVERTISEMENT

சிவகிரி: சிவகிரி, ராயகிரி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை(நவ. 13) மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடையநல்லூா் கோட்ட மின் செயற்பொறியாளா்(விநியோகம்)இரா. நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், சிவகிரி, கொத்தாடப்பட்டி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, வடக்குசத்திரம், தெற்குசத்திரம், வடுகபட்டி, ராயகிரி, மேலக்கரிசல்குளம், வழிவழிகுளம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ. 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT