திருநெல்வேலி

குண்டும், குழியுமான ஆவுடையானூா் சாலையை சீரமைக்க கோரிக்கை

12th Nov 2019 07:43 AM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம்: குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் ராம.உதயசூரியன், தென்காசி நெடுஞ்சாலைத்துறை கூடுதல் பொறியாருக்கு அனுப்பியுள்ள மனு; பாவூா்சத்திரம்-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஆவுடையானூா் சிதம்பரநாடாா்பட்டி சாலை, வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதில் மழை தண்ணீா் தேங்கியிருப்பதால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT