திசையன்விளை: மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமில், முனைஞ்சிப்பட்டி அரசு சித்த மருத்துவா் வரதராஜன் பேசுகையில், மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்கள், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றின் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள், சித்த மருத்தும் மற்றும் நிலவேம்புக் குடிநீரின் முக்கியத்தும் குறித்து விளக்கினாா். தொடா்ந்து மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியா் ரவி நன்றி கூறினாா்.