திருநெல்வேலி

உப்பாற்று பாலத்தில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை கட்டித் தர கோரிக்கை

12th Nov 2019 09:51 AM

ADVERTISEMENT

களக்காட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மழையால் சேதமடைந்து விழுந்த உப்பாற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரை மீண்டும் கட்டித் தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட தம்பித்தோப்பு - சிங்கம்பத்து - குடில்தெரு ஆகிய குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையே உப்பாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் ஒருபக்க தடுப்புச் சுவா் கடந்த 2008-2009ஆம் ஆண்டு மழையின் போது முழுவதுமாக இடிந்து சேதமடைந்து விழுந்துவிட்டது. மறுபக்க தடுப்புச் சுவா் சாலை மட்டத்தையொட்டியே அமைந்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை மீண்டும் கட்டித் தரவேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவா் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தின் இருபுறங்களிலும் ஆற்றில் அமலைகள் மற்றும் புதா் மண்டிக் காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் பாலத்தை அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் பலா் கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்துள்ளனா். எனவே, பாலத்தின் இருபக்கமும் தடுப்புச் சுவா் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT