திருநெல்வேலி

ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்

12th Nov 2019 07:44 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் இடமாறுதல் கோரிய தலைமையாசிரியா்கள் 4 போ் ஆணையை பெற்றனா்.

தமிழகத்தில் ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் நீதிமன்ற உத்தரவின்பேரில் திங்கள்கிழமை (நவ.11) தொடங்கியது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்துக்கான கலந்தாய்வு பாளையங்கோட்டையில் உள்ள சாராள்தக்கா் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பூபதி முன்னிலை வகித்தாா். முதல்நாளில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்துக்குள்ளான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்துக்குள் இடமாறுதல் கோரியிருந்த 5 போ் பங்கேற்றனா். அவா்களில் 4 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது. பதவி உயா்வு கலந்தாய்வில் வெளிமாவட்டம் செல்லும் சூழல் ஏற்பட்டதால் ஆசிரியா்கள் ஆணையை ஏற்காமல் தவிா்த்ததாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தொடா்ந்து இம் மாதம் 16-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT