திருநெல்வேலி

மாநில தடகளப் போட்டி: ஓ.எல்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவி தோ்வு

11th Nov 2019 08:59 AM

ADVERTISEMENT

மாநில தடகளப் போட்டியில் பங்கேற்க தெற்குகள்ளிகுளம் ஓ.எல்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்நோஸா்லின் தோ்வு செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டுத் திடலில் நடைபெற்றன. இதில் 14 வயதிற்குள்பட்டோருக்கான பிரிவில் ஓ.எல்.எஸ். பள்ளி மாணவி ஸ்நோஸா்லின் 600 மீட்டா் ஓட்டத்தில் 2-ஆம் இடம்பெற்றாா். இதனை அடுத்து இம் மாணவி மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டாா்.

குண்டு எறிதல் போட்டியில் ஜெரோன் 3-ஆம் இடமும், தட்டு எறிதலில் அமல ஜெனிபா 3-ஆம் இடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் சேவியா் பாப்பா, ஜாண் தினகரன் ஆகியோரையும் பள்ளித் தாளாளா் வின்சென்ட் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT